தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டம் பஞ்சப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த லாரி ஒன்றை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.
அந்த லாரியில் அழுகிய தேங்காய் மூட்டை பாரத்திற்கு மத்தியில் மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2 டன் அளவுள்ள குட்கா பறிமுதல் செய்து. லாரி ஓட்டுனர் பிடித்து விசாரித்ததில் பெயர் இளங்கோ 34, மேட்டூர் அருகே உள்ள செம்மனூர் கிராமத்தை என்பது தெரியவந்தது.
மேற்கொண்டு விசாரித்ததில் குட்கா கடத்திச் சென்றதை ஒப்புக்கொண்டார் இதையடுத்து பஞ்சப்பள்ளி போலீசார் மேற்கண்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.