திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 102 CrPcன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 600 மேற்பட்ட இருசக்கர உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடுதல் தொடர்பாக கடந்த 4 நாட்களாக மாவட்ட காவல்துறையினரால் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, இ.கா.ப, அவர்களின் முன்னிலையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவியன் மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் பொதுமக்களிடையே வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட 50 மாற்றுத்திறனாளிகளில், 20 நபர்களுக்கு இரு சக்கர வாகனத்தையும் அதற்குண்டான ஆவணத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
