திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் நாசர்(30) என்ற நபருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதை மறைத்து வயதுடைய இளம் சிறுமியை திருமணம் செய்வதாக, ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ய மறுத்தால், இறந்து விடுவதாக சொல்லியும், இளம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நாசர் பாலியல் குற்றத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் (இ.கா.ப) அவர்கள் 09.10.2020 ஆம் தேதி ஆணையிட்டார்.மேற்படி கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி நாசர் என்பவர்க்கு ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 21 நபர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டில் இதுவரை 34 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.