கோவை: சாமி ஐயர் புது வீதியை சேர்ந்தவர் பனஸ்வர் மல் 42 இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோல்டு வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கு பீளமேட்டைசேர்ந்த ரவிசங்கர் என்பவர் நவாவூர் பிரிவு சேர்ந்த நகை வியாபாரி தியாகராஜன் என்ற ராஜாராமைஅறிமுகம் செய்து வைத்தார்.
இவரிடம் பேனஸ் வர்மல் 6-10-2019 அன்று 5013.560 கிராம் தங்க நகைகளை கொடுத்து தங்கக்கட்டி தருமாறு கேட்டார். அதற்கு அவர் தியாகராஜன் 1663 .560 கிராம் தங்க கட்டிகள் மட்டும் கொடுத்தார். மீதி 3350 கிராம் தங்க கட்டிகள் கொடுக்கவில்லை.
இதை பேனஸ் வர்மன் கேட்டபோது தியாகராஜன் என்ற ராஜாராம் அவரது மனைவி , 2 மகள்கள் பீளமேடு ரவிசங்கர் ஆகியோர் சேர்ந்து பனஸ்வர் மல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேனஸ்வர் மல்வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் தியாகராஜன் அவரது மனைவி தனலட்சுமி 2 மகள்கள், ரவிசங்கர் ஆகியோர்மீதுகொலை மிரட்டல் உட்பட 2 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.