கோவை : கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வழக்கமாக, விநாயகர் சிலை வைத்து வழிபடும் இந்து அமைப்பினர் இடம், இந்த ஆண்டில் கொரானா தொற்று நோய் பரவல் காரணமாக, உயர் நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
இந்த நிலையில் கோவை மாநகரம் E3 சரவணம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.வி.செல்வராஜ் அவர்கள், அனைத்து இந்து அமைப்பினர் இடம், ஆலோசனை, பேச்சுவார்த்தைகள் நடத்தி, பொது இடத்தில் கூட்டம் கூடுவதை, தவிர்க்கும் வகையில், இதுவரை இல்லாத விதமாக, தனது சொந்த முயற்சியில், சரவணம்பட்டி பகுதியில் தற்காலிக குளம் அமைத்து, அதில் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் வைக்கப்பட்டிருந்த, 44 விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.
இதன் மூலம், பல்வேறு பகுதிகளுக்கு சென்று, விநாயகர் சிலைகளை கரைத்து, வந்த இந்து அமைப்பினர் இந்த புது முயற்சியால்தான், நோய்த்தொற்று காலத்திலும், உயர்நீதிமன்றம் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவினை, நடத்த வழிவகை செய்த, E3 சரவணம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை, வைத்து அவர்கள் மீது உடனடி வழக்குப் பதிவு செய்து, கைது செய்து, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வகையில், சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, சிறப்பான முறையில் பணியாற்றிய, காவல் ஆய்வாளர் அவர்களின் மெச்சத் தகுந்த பணியினைப் பாராட்டி, பாராட்டு மடல் வழங்கி, கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு.சுமித் சரண், IPS கௌரவித்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்