பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் சார்பாக 32-வது சாலை பாதுகாப்பு வார விழா நவம்பர் 9 முதல் 14 வரை கொண்டாடப்படுகிறது. மேலும் தொடக்க நாளான இன்று மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணி்ப்பாளர் திரு. மோகன்தாஸ் அவர்கள் தலைமையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல்துறையினர் கைத்தட்டி வரவேற்பு கொடுத்தும் அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். மேலும் பெரம்பலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கோபிநாத், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பால்ராஜ் மற்றும் காவல்துறையினர் இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தலைக்கவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு கொடுத்தும் பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டார்கள். சில நிமி்டம் சேமிப்பதாக நினைத்து, வாகனத்தில் வேகமாக பயணம் செய்து, வாழ்க்கையின் நேரத்தை இழந்த விடாதீர்கள்.