கோவை : கோவை மாவட்டம் நெகமம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பெரியவதம்பச்சேரி, வடவேலம்பட்டி, பெரிய கம்மாளப்பட்டி, S. அய்யம்பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், J.கிருஷ்ணாபுரம், தாளக்கரை ஆகிய 8 தாய் கிராமங்கள் மற்றும் அதனுடன் இணைந்த 24 குக்கிராமங்கள் அரசாணை எண். 263/Home/Pol.XIV dated 30.07.2020 ன் படி, சுல்தான்பேட்டை காவல் நிலைய சரக எல்லையுடன் சேர்க்க உத்தரவிடப்பட்டது.
நேற்று, 03/12/2020 ஆம் தேதி சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லையான காமநாயக்கன்பாளையம் நால்ரோடு அருகே, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.கந்தசாமி அவர்கள் தலைமையில், இணைப்பு விழா நடத்தி பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு, இதுநாள் வரை தங்கள் பிரச்சனைகளுக்காக சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நெகமம் காவல் நிலையத்திற்கு சென்று வந்த, மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இன்று முதல் தங்கள் பிரச்சனைகள் தொடர்பாக 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுல்தான்பேட்டை காவல்நிலையத்தை அணுக வழிவகை செய்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்