கோவை : கோவை மாநகர சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரை சேர்ந்த ரவுடி செந்தில் என்பவர் கடந்த மே மாதம் மணியகாரம்பாளையம் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் தனசேகரன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 1000/- பறித்து சென்றார். இவ்வழக்கு சம்பந்தமாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் செந்தில்குமார் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் விசாரணையில் செந்தில்குமார் மீது, கோவை மாவட்டம் மற்றும் மாநகர காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகள் 2 கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இவர்மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே குற்றவாளி அஞ்சுகம் நகர் செந்தில் வெளியே விடும் பட்சத்தில் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு வாய்ப்புள்ளது.
எனவே ஆய்வாளர் அவர்கள், செந்தில் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் பரிந்துரை செய்தார். கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி, அஞ்சுகம் நகர் செந்தில் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்