சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் கொரானா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உணவகங்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால், சாலையோர மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை.
இதனை கருத்தில் கொண்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக அன்றாடம் தமிழகம் எங்கும் உள்ள குடியுரிமை நிருபர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. பொது மக்களுக்கு மட்டுமல்லாது, காவல்துறையினருக்கும் தேவையான முக கவசங்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் பசித்தோருக்கு உணவு வழங்கும் உன்னத பணியினை இரவு பகலாக செய்து வருகின்றனர்.
இதன்படி,போரூர், லட்சுமி நகர், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், கேகே நகர் உணவு இல்லாமல், சாலையோரங்களில் வசிக்கும் 310 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக போரூர் காவல் ஆய்வாளர் திரு. சங்கர் நாராயணன் அவர்கள் வருகை தந்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்பித்து தந்தது குறிப்பிடத்தக்கது. பழகுவதில் இனிமை, பணியில் நேர்மை கொண்ட காவல் ஆய்வாளர் திரு.சங்கர் நாராயணன் அப்பகுதி மக்களுக்கு கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் அரணாக செயல்பட்டு வருகின்றார்.
அத்தகைய உயரிய சேவையை தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கமாக செய்து வரும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.