திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவின் ஐந்தாம் நாளான 24.01.2020 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா. சக்திவேல் அவர்கள் FIT INDIA அமைப்பின் சார்பாக உடல்நலத்தை பேணும் வகையில் சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மேலும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரை கூறினார்கள். நிகழ்ச்சியில் திண்டுக்கல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா