திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4நாட்களில் 3000 வழக்குகள் பதிவு செய்து 2700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அதிகாரி ஐஜி வனிதா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரியான ஐஜி வனிதா சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். செங்குன்றம் அடுத்த நல்லூர், எளாவூர் சோதனைசாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4நாட்களில் மட்டும் 3000வழக்குகள் பதிவு செய்து 2700 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாவட்டம் முழுவதும் 1100 போலீசார் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
காவல்துறையினருக்காக இல்லாமல் தங்களுடைய பாதுபாப்பிற்காக பொதுமக்கள் முகக்கவசங்கள் அணியவேண்டும் என கேட்டுக் கொண்டார். தற்போது அமலில் உள்ள இந்த 12நாட்கள் முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை முற்றிலும் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். அவசியத் தேவைகளின்றி இளைஞர்கள் வெளியே சுற்றி வழக்குகளில் சிக்கி பிற்காலங்களில் பிரச்சனைகளை தேடி கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார் அப்போது பொன்னேரி ஏஎஸ்பி பவன்குமார், டிஎஸ்பி கல்பனாதத் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்