சென்னை : வறுமையின் காரணமாக Online மூலம் பள்ளி, கல்லூரிகளில் கல்வி, தொழிற்கல்வி இணையதளம் மூலம் பயில கைபேசிகளோ, டேப்லட்களோ, லேப்டாப்களோ வாங்க இயலாத மாணவர்களுக்காக காவல் ஆணையாளரின் புதல்வியான செல்வி. குனிஷா அகர்வால் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டே ஏழை மாணவ, மாணவியரின் இணையதள கல்விக்காக மின்னனு சாதனங்கள் வழங்கி, உதவிட கடந்த ஜீலை மாதம் HelpChennai.org என்ற வலைதள பக்கத்தை துவக்கி தனது மூத்த சகோதரி சட்ட கல்வி பயின்று சட்ட பணிகள் ஆற்றிவரும் செல்வி.அர்ஷிதா அகர்வால் அவர்களுடன் இணைந்து, ஏற்கனவே உபயோகப்படுத்திய மின்னனு உபகரணங்களான கைபேசிகள், டேப்லட்கள் மற்றும் மடிக்கணினிகளை விருப்பமுள்ளவர்களிடமிருந்து பெற்று தேவைப்படும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகிறார்கள் இதன் மூலம் இதுவரை 300 ஏழை மாணவ, மாணவியர்க்கு இணையதள கல்வி பெற உதவிபுரிந்துள்ளார்கள்.
இதன் தொடர்ச்சியாக, HelpChennai.org மற்றும் HCL பவுண்டேசன் ஆகிய அமைப்புகளின் மூலம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (08.12.2020) சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புதிய டேப்லெட்களை 50 மாணவ மாணவியருக்கும், சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான 60 விலையுயர்ந்த கைப்பேசிகளை காவல் சிறார் மன்ற மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வாழ்த்தி ஊக்குவித்தார்கள்.
மேற்கண்ட மின்னணு உபகரணங்களை சென்னை பெருநர காவல் ஆணையாளர் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்தினார்கள். பயன்பெற்ற மாணவ, மாணவிகள் சிலர் தங்களின் இணையவழி கல்விக்காக உதவிய HelpChennai.org மற்றும் HCL பவுண்டேசன் அமைப்பாளர்களுக்கும், காவல்துறையினர்க்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் திரு.A.அமல்ராஜ், இ.கா.ப, இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.S.மல்லிகா, இ.கா.ப., துணை ஆணையாளர்கள், HCL பவுண்டேசன் துணைத் தலைவர் திரு.முரளிபாலா முதுநிலை துணை மேலாளர் திரு.நியூட்டன்ராஜ், தொன்பொஸ்கோ அன்பு இல்லத்தின் இயக்குநர் அருட்தந்தை லியோ, காவல் அதிகாரிகள், காவல் சிறார் மன்ற நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.