திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பை அகஸ்தியர்பட்டி பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் வர்கீஸ், இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு மும்பை ரிக் ஆயில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக பணகுடி, கோரி காலனி, பகுதியை சேர்ந்த நாகராஜ்@சார்லஸ்(58) என்பவர் பண மோசடி செய்து உள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவ செய்து குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) திரு.ராஜ்குமார் அவர்கள் தலைமையில் ஆய்வாளர்.திருமதி பிலோமினா மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி.சாவித்திரி ஆகியோர் நடத்திய விசாரணையில் நாகராஜ்@சார்லஸ் இதேபோல் 14 பேரிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவு ஆகியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த குற்றப் பிரிவு போலீசாருக்கு, நாகராஜ் பணகுடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர்.திருமதி பிலோமினா தலைமையிலான போலீசார் நாகராஜை மடக்கி பிடித்தனர்.பின்பு அவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரின் இத்தகைய செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.