திருவள்ளூர் : மீஞ்சூர் பகுதியில் குற்றப்பிரிவு ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் காவல் துறையினர் வாகன தணிக்கில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக (17) வயது சிறுவனிடம் பிடித்து விசாரித்த போது இரு சக்கர வாகனங்களை திருடுவது தெரியவந்தது. அந்த சிறுவன் அளித்த தகவலின் பேரில் பண்ருட்டியை சேர்ந்த அன்பு என்பவருடன் சேர்ந்து இரு சக்கரங்கள் வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு விற்பது தெரிய வந்தது. இதனையடுத்து குற்ற பிரிவு ஆய்வாளர் டில்லி பாபு தலைமையிலான காவல் துறையினர், பண்ருட்டிக்கு சென்று அன்புவை கைது செய்து விசாரணை செய்த போது மீஞ்சூர், அம்பத்தூர், திருவேற்காடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி விழுப்புரம், கள்ளக்குறிச்சி,பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.இதனைதொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்களில் பறிமுதல் செய்தனர்.இதில், பண்ருட்டி சேர்ந்த அன்பு என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும், (17) வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு