திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (44) கடந்த 8ஆம் தேதி வங்கியிலிருந்து 4.50 லட்ச ரூபாய் பணம் எடுத்து கொண்டு மீஞ்சூர் பஜாரில் இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது இருசக்கர வாகனத்தின் டிக்கி உடைக்கப்பட்டு வைத்திருந்த பணம் பறி போய் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக மீண்டும் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில் காவல் துணை ஆணையர் முருகேசன் தலைமையில்ஆய்வாளர் பன்னிர்செல்வம் உதவி ஆய்வாளர் சைமன் துரை மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து வங்கி சிசிடிவி கேமரா மற்றும் ஓட்டல் அருகே பதிவான இரு சக்கர வாகன என்னை வைத்து விசாரித்து வந்தனர்.
ஆந்திர மாநிலம் நகரி ஓஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரவி(45) பிரபுதாஸ் (46) சுதாகர் (50) என்பது தெரிய வந்தது சுதாகர் தலைமறைவாகியுள்ள நிலையில் ரவி பிரபுதாஸ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தபோது 2 இருசக்கர வாகனத்தில் வந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதும் திருடிய பணத்தை சம பங்காக பிரித்துக்கொண்டு ஆந்திராவில் தலைமறைவாக சுற்றித் திரிவதும் பணம் செலவழிந்தது தமிழகத்தில் ஊடுருவி வங்கிகளில் நோட்டமிட்டு பணம் எடுத்துச் செல்பவர்களிடம் திருடிக்கொண்டு செல்வது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 3 மூன்று லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் விசாரணை செய்ததில் பூந்தமல்லி திருவள்ளூர் ஆவடி அம்பத்தூர் கவரப்பேட்டை பொன்னேரி உள்ளிட்ட பல இடங்களில் வங்கியில் பணம் எடுத்து வருபவரை குறி வைத்து பணம் பறிப்பது தெரியவந்தது அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர் 1.50 லட்சத்துடன் தலைமறைவாகியுள்ள சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து நமது நிருபர் J.மில்டன் மற்றும் J. தினகரன்