தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் , சார்பு ஆய்வாளர் திரு. கற்பக ராஜா மற்றும் காவலர்கள் திரு. சவுந்தர் ராஜன்,திரு. இசக்கிமுத்து ஆகியோர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், வாகனத்தில் சென்னையிலிருந்து சுமார் 3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை சுமார் 21 கிலோ எடை கொண்ட கட்டிகளாக விற்பனைக்காக கொண்டுவந்த கன்னியாகுமரி குலசேகரத்தினை சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்ரோஸ் மற்றும் திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்த மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் வசம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் முதலியவை ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவு பொருட்களின் மதிப்பு சுமார் 3.5 கோடி ஆகும்..