நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து குழந்தையின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .போலீசார் கோபாலகிருஷ்ணன் மீது கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். இவர் மீது ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது . இந்த நேற்று வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிருஷ்ணனுக்கு 10 சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும், விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மாலினி ஆஜரானார்.