தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஜூடி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் உள்ள தனியார் உப்பள கொட்டகையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராம்குமார்(22), தூத்துக்குடி பி & டி காலனி பகுதியை சேர்ந்த நாகசுந்தரம் மகன் பிரதீப் (22). மற்றும் தாளமுத்துநகர் தாய் நகர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் லிங்கம் (64) ஆகிய 3 பேர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான ராம்குமார், பிரதீப் மற்றும் லிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா, ரொக்கபணம் ரூபாய் 55,000/- மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.