பெரம்பலூர்: பெரம்பலூர்அருகே உள்ளமுருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரேம்நாத் 24. இவர் மீது, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.
கீழப்பெரம்பலூர், மேலத் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் தொட்டி (எ) ரமேஷ் 39, கீழப்பெரம்பலூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த திருமாவளவன் மகன் முத்துக்குமார் 31. இவர்கள் 3 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி திரு.மணி பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில் கலெக்டர் திரு.ஸ்ரீ வெங்கடபிரியா உத்தரவின் பேரில் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.