நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அருகே செல்லூர் சாலையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் அவரது இருசக்கர வாகனத்தில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.
அப்போது அந்த வழியே நின்று கொண்டிருந்த 3 நபர்கள் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அந்த நபர் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் பகுதியைச் சேர்ந்த அந்த 3 நபர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வெளிப்பாளையம் காவல்துறையின் இந்த நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா இகாப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.