கோவை : கோவை மாநகரில் நேற்று முன்தினம் மூன்று கோவிலின் அருகில் யாரோ மர்ம நபர் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் விதமாக டயர் மற்றும் உபயோகமற்ற பொருட்களை தீயிட்டு எரித்து இந்துக்களின் உணர்ச்சிகளை செய்து கலவரத்தை தூண்டி அமைதியை கெடுக்கும் எண்ணத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக C2 பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், P4 உக்கடம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புலன் விசாரணையில், அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, சம்பவத்தை செய்த நபர் அடையாளம் காணப்பட்டார். பின்னர் தனிப் படையினர் சம்பவத்திற்கு காரணமான கஜேந்திரன் 48 என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் இவர் குடும்ப பிரச்சனை இருப்பதாலும் அதனால் மன உளைச்சலில் இருப்பதும் தெரியவந்தது. மேற்படி கைது செய்யப்பட்ட நபர் எந்த ஒரு அமைப்பையோ அல்லது கட்சியையும் சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்