திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கடந்த 2018-ம் வருடம் மருதம்புத்தூர், மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்த ராஜபாண்டி என்பவரின் மகனான ராமையா (35/18) என்பவரிடம் அதே ஊரைச் சேர்ந்த நயினார் என்பவரின் மகன் அருள்ராஜ் 46. என்பவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அருள்ராஜ் ராமையாவிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார்.
பின்பு அருள்ராஜ் ராமையாவிடம் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்து கொண்டு 05.04.2018 அன்று மருதம்புத்தூரிலிருந்து நாலாங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள இராமையாவிற்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த போது அங்கு வந்த அருள்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான தாமரை செல்வன் 29, சுந்தர் 27, கண்ணன் 33, ரவி இசக்கி 38, ரமேஷ் 34 ஆகியோர் சேர்ந்து இராமையாவை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து இராமையாவின் மனைவி கலா கொடுத்த புகாரின் அடிப்படையில் முக்கூடல் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி திரு. ராபின்சன் ஜார்ஜ் அவர்கள் குற்றவாளிகளான அருள்ராஜ், தாமரை செல்வன், சுந்தர் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்தும். மேலும் இவ்வழக்கில் மற்ற குற்றவாளிகளான கண்ணன், ரவி இசக்கி, ரமேஷ் ஆகிய மூவரையும் விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த முக்கூடல் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.