தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், அவர்களின் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் காவல் துறையினர் , நேற்று (29.07.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஏரல் சிவகளை பகுதியைச் சேர்ந்த காசி மகன் அரசமுத்து (62), என்பதும் அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தும் தெரியவந்தது. உடனடியாக மேற்படி காவல் துறையினர், குற்றவாளி அரசமுத்துவை கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஏரல் காவல் நிலைய காவல் துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.