சிவகங்கை : சிவகங்கை ராணி வீரமங்கை வேலு நாச்சியாரின் 293வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை, ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன்முதலில் சுதந்திர போரை தொடங்கியவர் சிவகங்கையை ஆண்ட ராணி வேலு நாச்சியார். தமிழக அரசு இவருக்கு சிவகங்கையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3-ந் தேதியன்று அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு ராணி வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த நாள் விழா சிவகங்கையில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். விழாவில் கலந்து கொண்டவர்கள் சிவகங்கை நகர்மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி