திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.MR.சிபிசக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.KS.ஹேமசித்ரா அவர்களின் தலைமையில், தண்டராம்பட்டு வட்டம் காவல் ஆய்வாளர் திருமதி.K.பாரதி, தானிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.G.முத்துக்குமாரசாமி, திரு.I நசீருதீன் மற்றும் போலீசார் இணைந்து பீமாரப்பட்டி, மேல்திருவடத்தனூர் பகுதிகளில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் சுமார் 260 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த ஆனந்தன், வயது 25, ராஜீவ்காந்தி, வயது 34, கோபி, வயது 44, செல்வராஜ், வயது 29, கண்ணன், வயது 50, ஏழுமலை, வயது 45, ராமர், வயது 30, கோவிந்தன், வயது 60, ஆகியோர் தானிப்பாடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் செங்கம் வட்டம் உச்சிமலை குப்பத்தில் செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.SR.சின்ராஜ் அவர்களின் தலைமையில் மேல்செங்கம் காவல் ஆய்வாளர் திருமதி.M.மலர், பாச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.சின்னதுரை மற்றும் போலீசார் இணைந்து உச்சிமலை குப்பம் பகுதியில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த ராஜா, வயது 35, ஆறுமுகம், வயது 62, ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.