விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் விழுப்புரம் குழுவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளியோர்களுக்கும், வயதானவர்களுக்கும் அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் செஞ்சி உட்கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை காவல்துறையினர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கும் வயதானவர்களுக்கும் அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஆயுதப்படை துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இராமசுவாமி, ஆய்வாளர் திரு.கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்