ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் மற்றும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் அரக்கோணம் கும்மினி பேட்டை பகுதியை சேர்ந்த சுமார் 250 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
அரக்கோணம் ஜெயின் சங்கமும், போலீஸ் நியூஸ் பிளஸ் ராணிப்பேட்டை மாவட்ட நிருபரும், நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவர் (ஒளிபரப்பு ஊடக பிரிவு) திரு.பாபு அவர்களும், இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் மற்றும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து ஊடரங்கு பிறப்பித்த நாள் முதல் தேனீக்கள் போல சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களை கொரானாவிலிருந்து பாதுகாக்க தன்னார்வலர்கள் குழுவை அமைத்து, இரவு பகல் பாராமல் அவர்களுக்கு உணவு அளித்து சிறப்பான பாதுகாப்பு பணியினை செய்து வருகின்றனர். அவர்கள் இருவரின் அணுகுமுறை அரக்கோணம் பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.