கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி(26) . இவர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி அதில் நன்கு படித்த மற்றும் வசதி படைத்த பெண்களை குறி வைத்து நட்பு ஏற்படுத்தி கொண்டு வந்துள்ளார். மேலும் நட்பில் உள்ள பெண்களிடம் தனியாக சந்தித்து அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்துள்ளார். அவனுக்கு பணம் தேவைப்படும் பொழுது பெண்களை தொடர்பு கொண்டு உங்கள் புகைப்படங்களை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி பல லட்சங்கள் பணம் பறித்துள்ளார்.மேற்கண்ட முறையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் காசியின் மீது u/s 354,354C,354D,385,420 IPC r/w 66A,66E,67 of IT Act படி வழக்குப்பதிவு செய்து அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் காசி மற்றும் அவரது கூட்டாளிகள் மூலம் ஏமாற்றபட்ட பெண்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்ணில் 9498111103 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவரின் ரகசியம் முழுமையாக காப்பற்றப்படும்.