கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுபடி கடலூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி கே சாந்தி அவர்களின் தலைமையிலான போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக S. புதூர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டதில் மோட்டார் கொட்டகையில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இது சம்பந்தமாக S. புதூரை சேர்ந்த தனசேகரன் வயது 48 ,தனசேகரன் வயது 36 ,சக்திவேல் வயது 41 ,சிவமணி வயது 33 ,ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்