இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த பாம்பனை சேர்ந்த இருவருக்கு இ-சலான்(E-challan) மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே அபராதம் விதிக்கப்பட்டதிற்கான குறுந்தகவல் இருசக்கர வாகனத்தின் உண்மையான உரிமையாளர் திண்டுக்கல்லைச் சேர்ந்த தியாகு என்பவருக்குச் சென்றது.
ஓர் ஆண்டுக்கு முன்னதாக தனது வாகனம் திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்த நிலையில் திருடு போன வாகனத்திற்கு அபராதம் விதித்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அவர் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS, அவர்களை தொடர்பு கொண்டார். காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் பாம்பன் காவல்துறையினர் பாம்பனை சேர்ந்த ரஞ்சித் கான் மற்றும் ஹமீது சுல்தான் ஆகிய இருவரையும் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திக்ராஜா அவர்கள் U/S 379 -ன் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்