கடலூர் : கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் 15.4.2020 தேதி பணியில் இருந்தபோது காவலர் திரு ராமச்சந்திரன் விபத்து ஏற்பட்டு முகதாடையில் பலத்த அடிபட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் 2011ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தவர். 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் டெலிகிராம் மூலம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள் .
மேலும் கடலூர் மாவட்டம் காவல் சொந்தங்கள் டெலிகிராம் மூலம் இணைந்து உதவி செய்து வருகிறார்கள் .
விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரனுக்கு உதவும் நோக்கத்தோடு இந்த இரண்டு குழுக்களும் இணைந்து ரூபாய் 1, 60 ,000 ஆயிரம் ரூபாய் காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு M.ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி ரீனா அவர்களிடம் வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்