விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட வீரபாண்டி கிராம மலை பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி. ரேணுகாதேவி தலைமையில் காவலர்கள் அன்பழகன்,மாறன்,CIU குமரன் அனைவரும் சாராய ரெய்டு செய்ததில் இன்று 21/04/2020 மதியம் 13.00 மணிக்கு மூன்று நீல நிற பேரல்களில் ஒவ்வொரு பேரல்களில் தலா 200லிட்டர் வீதம் மொத்தம் 900 லிட்டர் ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தலைமறைவு எதிரியான 1.குரு த/பெ வேட்டைகார ஏழுமலை, சக்கர விநாயகர் கோவில் தெரு, வீரபாண்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்