கடலூர் : கடலூரில் இரவுபகல் பாராது பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் அவர்கள், துவக்கி வைத்து நமக்காக பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றியும், நமது குழுவிற்கு பிரத்தியேக நேர்லையும் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் கடலூர் துணை காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் கலந்துகொண்டு தூய்மைபணியாளர்களுக்கு பொருட்களை வழங்கினார். உடன் கடலூர் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார் அவர்களும், உதவிஆய்வாளர் மணிகண்டன் அவர்களும், மற்றும் சிறகுகள் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்