சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தென்மாவயல் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக 19.04.2020 அன்று கல்லல் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை செய்ததில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 10 லிட்டர் ஊரல் போட்டு இருந்த 7 நபர்கள் மீது u/s 270 IPC and 134,135 public health act & 4(1) (g)TNP act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அதில் 4 நபர்களை கைது செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்