சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேகம்பத்தூரில் நாகூர் ஆண்டவர் மெடிக்கல் நடத்திவரும் சேக் அப்துல்லா என்பவர் போலியாக அப்பகுதி மக்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் செய்து வந்துள்ளார்.
இத்தகவலை அறிந்த தேவகோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் திரு.செங்கதிர் என்பவர் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் 18.04.2020 அன்று அளித்த புகாரின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்த காவல்துறையினர் போலியாக மருத்துவம் செய்த மேற்படி நபர் மீது u/s.417,420 IPC & 15(3) Indian medical council act 1956-ன் படி வழக்கு பதிந்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்