இராமநாதபுரம் : ஊர்காவல்படைச் சேர்ந்த பாண்டி (வயது23) தியாகராஜன் (வயது24 )சசிமோகன் (வயது22)விக்ணேஷ்குமார்(வயது24) பேர் கைது பரமக்குடி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் வகையில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குபதிவு, செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யபடுகிறது. இதன்படி பரமக்குடியில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.
இந்த நிலையில் பரமக்குடி தாலுக போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யபட்டுள்ள, இருசக்கர வாகனங்களில் இருந்து தினமும் சிலர் பெட்ரோல் திருடுவதாக தெரியவந்தது. அதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கன்கானிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீஸ்சார் சோதனையிட்டனர். சோதனையின் அதன் அடிப்படையில் பரமக்குடி நகர் போலீஸ்சார் வழக்குபதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்