அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி,அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. திருமேனி மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் விதமாக பச்சை பெயிண்ட் காவல்துறையினரால் வாகனங்களில் பூசப்பட்டது.
கிராமங்கள் வாரியாக ஒதுக்கப்பட்ட நாட்களில் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க வர வேண்டும் அதற்கென மூன்று வண்ண நிற அனுமதி சீட்டுகள் மக்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.தங்களுகாக ஒதுக்க பட்ட நாட்களில் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கையின் மூலம் அத்தியாவசிய தேவைகள் இன்றி 144 தடை உத்தரவை உதாசீனப்படுத்தி வெளியே சுற்றும் நபர்களை மிக எளிதாக கண்டறிந்து அவர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.