இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்வகுமார், பணி முடித்து வீட்டிற்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது சிகிச்சை செலவிற்காக இராமநாதபுரம் மாவட்ட காவலர்கள் மற்றும் பிற மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் அவரது நண்பர்களும் இணைந்து உதவிய தொகை Rs. 4,45,000/-யை, அனைத்து காவலர்கள் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS, அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் செல்வகுமாரின் தந்தையிடம் இன்று (13.04.2020) வழங்கினார்கள். சிகிச்சைக்கான தொகையை பெற்று கொண்ட செல்வகுமாரின் தந்தை தக்க சமயத்தில் உதவிய அனைத்து காவலர்களுக்கும் அவரது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களையும் Telegram APP மூலம் ஒன்றிணைத்த முதல் வாரத்திலேயே இராமநாதபுரம் மாவட்ட காவலர் செல்வகுமார் அவர்களுக்கு உதவிட இச்செயலி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்