சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 07.4.2020 அன்று காவல் ஆளிநர்களுக்கு முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான் வழங்கி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், இன்று (07.4.2020) காலை பெரியமேடு, ரிப்பன் மாளிகை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் அருகில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் (Face Mask) மற்றும் திரவ சுத்திகரிப்பான் (Liquid Hand Sanitizer) வழங்கினார். மேலும், ஆரண்யா பவுன்டேஷனின் தன்னார்வலர் திரு.அருணவ் ரத்தோர், திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., (காவல்துறை கூடுதல் இயக்குநர், சீருடை பணியாளர் தேர்வாணையம்) என்பவர் அவரது பவுண்டேஷன் சார்பில் சென்னை பெருநகர காவல்துறைக்கு சுமார் 35,000 லிட்டர் அளவு கொண்ட பழச்சாறு (Fruit Juice) பாக்கெட்டுகளை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை