சென்னை : கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு
அடுக்கிய கோடியுண்டாயினும் இல்
திருக்குறள் : 1005,
வறுமையில் வாடுவோர்க்கு, தன்னிடமுள்ள செல்வத்தை கொடுத்து உதவுதலும், அந்த செல்வத்தின் பயனால் தானும் அனுபவித்து இன்பமாக வாழ்தலும் இல்லாதவரிடத்தில், கோடி கோடியாக செல்வம் இருந்தாலும், அதனால் எவ்வித பயனுமில்லை என்பதே உண்மையாகும்.
செல்வத்தின் பயனே ஈதலாகும் என்பான் வள்ளுவன். அந்த செல்வத்தை நாமும் சரியாக அனுபவித்து, அடுத்தவருக்கும் கொடுத்து, அவர்களுடைய வறுமையை போக்குவதால், அவர்களுடைய அகத்திலும் முகத்திலும் தோன்றும், மகிழ்ச்சியாலே இன்பம் அடைவதே மிகச்சிறந்த ஒன்றாகும். கோடி கோடியாக செல்வத்தை சேர்த்து வைத்து அதை யாருக்கும் பயனில்லாமல் அடுக்கி வைத்து பார்ப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.
கொடுப்பதே உயர்வு, 1005 திருக்குறளை பின்பற்றும் வகையில், இன்று திங்கட்கிழமை 06.04.2020 நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, பல குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரவோயல் இன்ஸ்பெக்டர் அவர்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி T4 மதுரவாயல் காவல் நிலைய சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் T. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கக்கூடிய காவலர்களுக்கும், உணவு. வெஜிடேபிள் பிரியாணி வழங்கப்பட்டது சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் மதிய உணவாக பிரிஞ்சி சாதம், ஊறுகாய் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. சுமார் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
ஐந்து கிலோ புழுங்கல் அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ கோதுமை மாவு, ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில், ஒரு சேமியா பாக்கெட் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
உணவு வழங்கப்பட்ட பகுதிகள்:- போரூர் சிக்னலில் இருந்து ஆர்-8 வடபழனி காவல் நிலையம் வரைக்கும் மற்றும் கண்டோன்மெண்ட் பகுதி.
வாழ்க காவலர்கள் ! வளர்க காவல்துறை !
கொள்கைக் கொண்டு, இந்த நிகழ்ச்சிகளை சிரமம் பாராமல் அயராது உழைத்து ஏழை எளிய மக்களை நேசித்து வரும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர்.முகமது மூசா, அவர்களது நற்செயல்களை குறித்து பாராட்டுகிறோம்.