சேலம் : சேலம் மாவட்டம், ஊரக உட்கோட்டம் ஏற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரங்கம், செந்திட்டு, நார்த்தன் சேடு உள்ளிட்ட சுமார் 18 கிராம மக்கள் லட்சுமி எஸ்டேட் வழியாக கொட்டச்சேடு கிராமம் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றக் கோரி இருந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் (17/3/2023)-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின்படி வருவாய்த்துறையினர் சாலையை அமைத்தனர். அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்கி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு.சிவகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இந்த சாலை அமைக்கும் முன்பு அந்த கிராம மக்கள் கொட்டச்செயடு பகுதி வருவதற்கு சுமார் 17 கிலோமீட்டர் கடந்து வந்த நிலையில் தற்போது சாலை அமைத்த பின்பு கொட்ட செய்து வந்தடைய 3 கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது என அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்