கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் கடந்த ஏப்ரல் 18 அன்று மாதையன் என்பவரது பூட்டிய வீட்டில் இருந்து 260 சவரன் தங்கநகைகள் திருடி சென்ற வழக்கில், அருண் (எ) லூர்துராஜை ஓசூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடமிருந்து 260 சவரன் தங்கநகைகளை முழுமையாக மீட்டு அதிரடி காட்டி உள்ளனர். அதனால் ஓசூர் பொது மக்கள் மற்றும் டி. எஸ். பி. தலைமையிலான காவல்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்