தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் ,மற்றும் அமைச்சுபணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசுக்கு போலீஸ் துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் போலீஸ் துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினர் , அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 26 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்து உள்ளது. நியமன ஆணை இந்தபணிக்கான பணி நியமன ஆணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பாலாஜி சரவணன், நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அலுவலர் திரு.குமார், அலுவலக கண்காணிப்பாளர் திரு. செல்வக்குமார் மற்றும் உதவியாளர் திருமதி.கிருஷ்ணம்மாள், மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.