திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அதனைச் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் இன்று நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அறுசுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது.
பாலா விஹார் 1953 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. இங்கு தற்போது 254 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேசமயம், கில்பாக், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது. தென்னிந்தியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகமாக திகழ்ந்து வருகின்றது. இங்கு பிசியோதெரபி, தொழில்சார் சிகிச்சை, பேச்சு சிகிச்சை, நடத்தை மாற்றம் சிகிச்சை, யோகா, ப்ளே தெரபி, மியூசிக் தெரபி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கான தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு சிகிச்சைகள் அடங்கிய ஒரு தனித்துவமான சிகிச்சை முறை அளிக்கப்பட்டுவருகின்றது.
இத்தகைய சிகிச்சை மூலம் மனநலம் குன்றியவர்களின் கல்விசார் சமூக திறன்கள், உடல் மற்றும் மன விழிப்புணர்வு மற்றும் ஆளுமையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன.
இத்தகைய நல்ல நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மறுவாழ்வு மையத்திற்கு மறுவாழ்வு மையத்திற்கு மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிய உணவு, தின்பண்டங்கள் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.அரவிந்தன் IPS அவர்கள் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகள் வளாகத்தை பார்வையிட்டும் அவர்களை நலம் விசாரித்து உணவு பரிமாறினார். அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து ஆர்வமுடன் கேட்டு அறிந்தார். இவரது இச்செயல் அவர்களை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தற்போது அரவிந்தன், IPS அவர்கள் பணியாற்றி வருகிறார். தனது அலுவல் மட்டுமல்ல அதைத் தாண்டி அரவிந்தன் ஐபிஎஸ் சமூகப் பொறுப்புள்ள பல நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்துவதில் மிகுந்த ஆர்வமுள்ளவர்.
திரு.அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களை தெரியாதவர்களே திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்க முடியாது எனலாம். முதல் தேர்விலேயே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கரூரில் பணியில் அமர்ந்து, தென்காசிக்கு பணிக்காக வந்தார். ஒரு அதிகாரியாக இல்லாமல், அங்குள்ள மனிதர்களில் ஒருவராக அனைவரையும் நேசித்த நேர்மையான அதிகாரி.
தென்காசியில் முதன்முதலாக இவர் பொறுப்பேற்ற புதிதில் குற்றாலத்தின் நிலையைப் பார்த்து, குற்றாலம் சுத்தமாக இருக்க மிகுந்த சிரமம் எடுத்து செயல்பட்டவர். உயர்நீதிமன்ற கிளை உத்தரவை செயல்படுத்த இரவு பகலாக குற்றாலத்தில் நேரடி பணி செய்தார். பள்ளி மாணவர்களை அதிகம் நேசிக்கும் இவர் பள்ளி மாணவர்கள், மாணவிகள் பலரை நல்வழிப்படுத்தி அவர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுத ஊக்கப்படுத்த வேண்டும் என அடிக்கடி பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகளுடன் உரையாடுவார்.
எளிமையானவராக இருந்தாலும் தப்பு செய்பவர்களுக்கு இவர் தயவு காட்டியது இல்லை. குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடிகளை பாத்ரூமில் தவறி விழுந்து விட்டனர் என்று புகைப்படத்துடன், சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்.
காவல் துறையில் இருப்பவர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைத்தால் கூட, தலையை எங்கே வைக்கலாம் என்றுதான் தோணும். ஆனால் இவர் தனது ஓய்வு நேரத்தை மாணவர்களுக்காக, ஒதுக்கி அவர்கள் வாழ்க்கையில் முன்னேற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இவர் சென்னையில் காவல் துணை ஆணையராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது, சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை பழுதாகி உள்ளதாகவும், அதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் என்னும் பதிவை சமூக வலைதளங்களில், புகைப்படத்துடன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இதனைக் கண்ட திரு.அரவிந்தன் ஐபிஎஸ் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அந்த சாலையை சரி செய்ததோடு, மட்டுமல்லாமல், முகநூலில் சாலை பதிவு, புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்த அந்த நபருக்கும் உடனடியாக தொடர்பு கொண்டு சாலை சரி செய்யப்பட்ட விஷயத்தை தெரிவித்துள்ளார்.
மக்கள் நலப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்காமல், இருக்கும் இன்றைய நாட்களில், தனது துறை சார்ந்த விஷயம் இல்லை என்றாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்த திரு.அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களை, அப்பகுதி மக்கள் அன்று மனதார பாராட்டினார்.
சென்னையில் உள்ள பின்தங்கிய மாணவர்களை அழைத்து, அவர்களுக்கு கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவார். “ஒரு வழிகாட்டுதல் இருந்தால் போதும், இவர்கள் தங்களது கனவை அடைந்து விடுவார்கள். இவர்களை மேம்படுத்தும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.” என்பதே திரு.அரவிந்தன் அவர்களின் கூற்று.
இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளரும் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபருமான திரு.முகமது மூசா மற்றும் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்கள் சிறந்த சமூக சேவகர். பசித்த ஏழைகளுக்கு உணவு தருதல், மானத்தை காக்க உடை தருதல், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் தருதல் என பல்வேறு நலதிட்ட உதவிகளை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றார்.
ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்று என்று நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். நோயுற்றிருப்பவரை நலம் விசாரித்தல் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய ஐந்து கடமைகளில் ஒன்றாக நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்வது சொர்க்கத்திற்குச் செல்வதைப் போன்றதாகும். அதனை தன் வாழ்வின் லட்சியமாக கொண்டு செயல்படுபவர் திரு.முகமது மூசா அவர்கள்.