திருவள்ளூர் : பொன்னேரியில் நேதாஜி சோசியல் ஆர்க் அமைப்பு சார்பில் 250வது வாரம் மரக்கன்று நடும் விழா. பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம் 5001 வது மரக்கன்றுகளை நட்டு, புவி வெப்பமயமாவதை கட்டுப்படுத்தி, பசுமை பூமியாக மாற்ற முயற்சி.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேதாஜி சோசியல் ஆர்க் மற்றும் மர வங்கி சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. கொடூர் கிராம குளக்கரையில் 250வது வாரத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் . பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் கலந்து கொண்டார் .
தொடர்ந்து 250வாரங்களாக 5001 மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமை சூழலை ஏற்படுத்தவும் மரக்கன்றுகளை நட்டு வருவதாக நேதாஜி நற்பணி மன்ற தலைவர் நேதாஜி ஸ்ரீதர்பாபு தெரிவித்தார். நிகழ்வில் பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் திரு.மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத், பரிமளம் ஜெயா, கிருஷ்ணப்ரியா வினோத், கொடுர் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், தடப்பெறும் பாக்கம் தலைவர் பாபு, துணை தலைவர் சபிதா பாபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா நந்தன், ஸ்ரீதேவி கல்லூரி செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்