திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில், பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலைங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரன், அவர்கள் மேற்பார்வையின் கீழ் சைபர் கிரைம் போலீசார் காணாமல் போன செல்போன்களை IMEI எண்கள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 105 ஆன்ட்ராய்டு வகை செல்போன்களை மீட்டு இன்று (17.09.2022) திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா