மீஞ்சூர் பேரூராட்சி 12 வது வார்டு பச்சையம்மன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை. மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஆகியோர் கலந்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில்பூமி பூஜையை துவக்கி வைத்தனர்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 12 வது வார்டு பச்சையம்மன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பனிரெண்டாவது வார்டு கவுன்சிலர் பாஸ்கர் சிறப்பாக செய்திருந்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் காசு தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தனர்.
அருகில் திமுக மூத்த முன்னோடி மீ.வி.கோதண்டன், பச்சையம்மன் நகர் குடியிருப்பு நல சங்க தலைவர் செந்தமிழ் சசி, முன்னாள் பேரூர் கழக செயலாளர் நா. மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் கழக துணை செயலாளர் வ. மோகன், இளங்கோவன், தன்ராஜ், ஜெய்சங்கர், தகவல் தொழில்நுட்ப அணி அண்ணாமலை, இந்துஸ்தான் சீனிவாசன், விமல் ராஜ், அருண்நிதி, பச்சையம்மன் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் சங்கர் ,பழனிசாமி, ராஜேந்திரன், ஜெய் சரவணன், ராஜ்குமார், மற்றும் பச்சையம்மன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு