மதுரை : மதுரை மாவட்டத்தில் இருந்து கடந்த (11.09.22)-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளின் படி பரமக்குடிக்கு சென்றுவர அறிவுறுத்தப் பட்டிருந்தது. அவ்வாறு மதுரை மாவட்டம் மற்றும் மதுரை வழியாக சென்ற பிற மாவட்டங்களில் இருந்து பல்வேறு வாகனங்களின் மூலமாக வருகை புரிந்தவர்களில் காவல்துறை மற்றும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய 30 நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் அனைவரின் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் 25 நான்கு சக்கர வாகனங்களும், 5 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற (27.10.22) மற்றும் (29.10.22), (30.10.22), ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு காவல்துறை மற்றும் அரசு விதிகளின்படி விழாவிற்கு சென்றுவர அறிவுறுத்தப்படுகிறது. மேலும், காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது மதுரை மாவட்ட காவல் துறையினரால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், வழக்குபதிவு செய்தும், வழக்கில் சம்மந்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. R.சிவபிரசாத்.IPS., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி