மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நரிக்குறவர் காலனி சக்கிமங்கலம் மற்றும் இளமனூர் ஊராட்சிகளில் வசிக்கும் 25 ஏழை எளிய குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரிசி 5 கிலோ, பருப்பு 1கிலோ, உளுந்து 1 கிலோ, எண்ணெய் 1லிட்டர் மற்றும் 15 வகையான காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ADSP திருமதி.வனிதா அவர்கள், DSP. திரு.நல்லு ஊமச்சிகுளம், Trg. DSP.திரு.பிரசன்னா ஆகியோர் தலைமையில் திரு.மாடசாமி,காவல் ஆய்வாளர் சிலைமான் வட்டம் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திக், சி.சார்பு ஆய்வாளர்கள் மார்டின், ரவி மற்றும் காவலர்கள் ஆகியோர் வழங்கி உதவி செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்