திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 27/01/2020-ம் தேதியன்று வருடாந்திர கவாத்து (Demobilization parade) அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்கள், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன்(சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள், மற்றும் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் திரு.முத்தரசு அவர்கள் கலந்து கொண்டார்கள். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். மேலும் காவல் வாகனங்களையும், காவலர்களின் உடை பொருட்களை ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார்கள்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி